குடிக்கப் பணம் தராததால் ஆத்திரம்... தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது
மும்பை: மராட்டிய மாநிலத்தில் மது அருந்த பணம் தராத தந்தையை இரும்புக் கையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் காசிநாத் கசாரே(70). இவரது மகன் தினேஷ் கசாரே(38), அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 'வார்டு பாய்' ஆக பணி புரிந்து வருகிறார்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையான தினேஷ், தன் வருமானம் முழுவதையும் அதற்கே செலவழித்து உள்ளார். சமயங்களில் குடிக்க பணம் கேட்டு தன் தந்தைக்கும் தொல்லை கொடுத்து வந்துள்ளார் தினேஷ். அத்தகைய சமயங்களில் காசிநாத்தும் தன்னுடைய பென்ஷன் பணத்தில் இருந்து தினேஷ் மது அருந்த பணம் கொடுத்து வந்துள்ளார்.
இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் தினேஷ். ஆனால், தன்னிடம் பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார் காசிநாத். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியால் காசிநாத்தின் தலையில் வெறித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த காசிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்கு முன்னதாகவே தினேஷ் தலைமறைவானார்.
இக்கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷை நேற்று கைது செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications