மகாராஷ்டிரா நீர்ப்பாசனத் திட்டத்தில் ரூ.70,000 கோடி ஊழல்: அஜித் பவாரிடம் விசாரணை
மும்பை: மகாராஷ்டிர மாநில நீர்ப்பாசன திட்டங்களில் ரூ.70,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 3 பேரிடம் விசாரணை நடத்த அம் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது துணை முதல்வர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில் தாட்கரே ஆகியோர் நீர்ப்பாசன துறை அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

அவர்கள் இருவரும் ரூ.70,000 கோடிக்கு ஊழலில் ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 2012 பொருளாதார ஆய்வறிக்கையில், நீர்ப்பாசன திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 0.1 சதவீத அளவுக்கே நீர்ப்பாசன வசதி மேம்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாக கொண்டு இருவர் மீதும் விசாரணை நடத்த மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சாஹன் புஜ்பால், டெல்லியில் மகாராஷ்டிரா இல்லம் கட்டியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications