For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பகத்சிங்கை அவமதித்த காந்தியின் கொள்ளுப் பேரன் - ஜலந்தர் போலீஸ் வழக்கு

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கை அவமதிக்கும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், காந்தியடிகளின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

Mahatma Gandhi’s great-grandson Tushar booked for Bhagat Singh remark

சமீபத்தில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் துஷார் காந்தி பேசியபோது, "பகத் சிங், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான குற்றவாளி ஆவார். எனவேதான், அவருடைய தண்டனையை நிறுத்தி வைக்கும்படி காந்தியடிகள் கோரவில்லை" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், ஜன் ஜாக்ருதி மஞ்ச் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் கிஷன் லால் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் துஷார் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் காவல் சரகத்தின் ஆய்வாளர் பிமல் காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

English summary
The Jalandhar police on Sunday booked Tushar Gandhi, the great-grandson of Mahatma Gandhi, for his alleged controversial remarks against freedom fighter Bhagat Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X