'ரா' உளவாளி மாத்தையா- கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார்... நீனா கோபால் புத்தகத்தில் அதிர்ச்சி தகவல்
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்த மாத்தையா, இந்தியாவின் 'ரா' அமைப்பின் உளவாளியாக செயல்பட்டார் என்று இந்திய பத்திரிகையாளர் நீனா கோபால் எழுதியுள்ள புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது "The Assassination of Rajiv Gandhi" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் மாத்தையா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மாத்தையா அசைன்மெண்ட்
1989ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் உளவாளியாக மாத்தையா நியமிக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பெரும்பான்மையானோர் நம்பிக்கையைப் பெற்று பின்னர் தலைவராக இருந்த பிரபாகரனை அழித்துவிட்டு தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பதுதான் மாத்தையாவுக்கு கொடுக்கப்பட்ட 'அசைன்மெண்ட்'.

கிட்டுவை காட்டி கொடுத்த மாத்தையா
1993-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு வெளிநாடு ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கப்பல் குறித்த தகவலை 'ரா'வுக்கு கொடுத்ததும் மாத்தையாதான். அந்த கப்பல் சென்னை அருகே சுற்றி வளைக்கப்பட கப்பலை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் கிட்டு.

மாத்தையாவுக்கு மரண தண்டனை
கிட்டுவின் கப்பல் வரும் தகவலை மாத்தையாதான் இந்தியாவுக்கு காட்டி கொடுத்தார் என சந்தேகித்து தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் 1994-ம் ஆண்டு டிசம்பரில் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்தனர் விடுதலைப் புலிகள். அவரது ஆதரவாளர்கள் 257 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

பிரபாகரனை புரிந்து கொள்ளவில்லை
1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த போது, விடுதலைப் புலி்களுக்குள் 'ரா' அமைப்பு ஊடுருவியது. பிரபாகரன் மனதில் என்ன ஓடுகிறது என்ற சமிக்ஞைகளை நாம் சரியாக உணர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியை நாம் இழந்திருக்கமாட்டோம் என ரா அதிகாரி ஒருவர் கூறினார்.

ராஜீவின் தீர்க்கதரிசனம்
ராஜிவ்காந்தி அளித்த கடைசி பேட்டியில், தெற்காசியாவின் எந்த ஒரு தலைவரும் சக்திமிக்கவராக உருவானால் அவர் கொல்லப்படுவது தொடருகிறது. இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹஹ், எஸ்.ஆர்.டபிள்யூ.டி. பண்டாரநாயக்க என இந்த வரிசை தொடர்கிறது... நானும் சில கருப்பு சக்திகளின் இலக்காக இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு நீனா கோபால் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications