தென் மும்பையில் உள்ள பிரபல கிராபோர்ட் மார்க்கெட்டில் பயங்கர தீ: 60 கடைகள் எரிந்து நாசம்
மும்பை: தெற்கு மும்பையில் உள்ள பிரபல கிராபோர்ட் மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 கடைகள் எரிந்து நாசமாகின.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தென் பகுதியில் உள்ளது பிரபல கிராபோர்ட் மார்க்கெட். எப்பொழுதும் மக்கள் கூட்டம் அலைமோதும் அந்த மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று காலை 5.23 மணிக்கு எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசிய போது கிராபோர்ட் மார்க்கெட்டில் தீ விபத்து என்று தெரிவித்தனர். இதையடுத்து 10 வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் மார்க்கெட்டில் இருந்த 60 கடைகள் எரிந்து நாசமாகின. அவை அனைத்தும் வாசனை திரவியங்கள், பேக்கிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகும் என்றார்.
முனிசிபால் கமிஷனர் அஜோய் மேத்தா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு கூடிய மக்களை கலைந்து செல்லுமாறு அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்ரபதி சிவாஜி முனையம் அருகே இந்த மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications