மோடியை கொல்ல சதி?: ராஜஸ்தானில் 250 கிலோ வெடிபொருட்களுடன் 4 தீவிரவாதிகள் கைது
ஜெய்பூர்: ராஜஸ்தானில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் 250 கிலோ வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊடுருவி முக்கிய தலைவர்களை தாக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை குறி வைத்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மோடி போட்டியிடும் வாரனாசியில் நோட்டம் பார்த்துள்ளனர். அவர்கள் தேர்தல் நேரத்தில் வாரனாசியை தாக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 250 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஜெய்பூரில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் கயா, பாட்னா, ஹைதராபாத்தின் ஜாவேரி பஜார் மற்றும் தில்சுக்நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய வாக்கஸ் என்ற அகமது ஜாவிதும் ஒருவன். அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கஸ் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கலுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications