Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலையில் நாளை மகரவிளக்கு... திருவாபரணப் பெட்டி ஊர்வலம்: குவியும் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனமும் நாளை நடைபெறு கிறது. மகரவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மலைப் பகுதிகளில் அவர்கள் கூடாரம் அடித்து தங்கி உள்ளனர். மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளதால் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16ம்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். பின்னர் டிசம்பர் 27ம்தேதி மண்டல பூஜை நடந்தது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ம்தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புதன்கிழமை பகல் 1 மணிக்கு சபரிமலை நோக்கி சரண கோஷம் முழங்க ராஜபிரதிநிதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது.

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடக்கிறது. மகர விளக்கு, மகரஜோதி தரிசனம் காண சபரிமலைக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் கூட்டம், கூட்டமாக இருமுடி சுமந்து வந்து, ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

அன்னதானம்

அன்னதானம்

மகர விளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் பம்பை விளக்கு மற்றும் சிறப்பு அன்னதானம் இன்று (வியாழக்கிழமை) சன்னிதானத்தில் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலசம், அஸ்திர கலசம், ஆகிய பூஜைகள் நடந்தன, அதைத்தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் அத்தாள பூஜைக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இன்று காலை பிம்ப சுத்தி பூஜைகள் நடைபெறும்.

நாளை மகரவிளக்கு

நாளை மகரவிளக்கு

நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைநகரான திருவனந்தபுரம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 1.27 மணிக்கு மகர சங்ரம பூஜை நடத்தப்பட்டு அதிகாலை 2 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து வழக்கம்போல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

திருவாபரணப்பெட்டி ஊர்வலம்

திருவாபரணப்பெட்டி ஊர்வலம்

மகரவிளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து புதன்கிழமை பகல் 1 மணிக்கு சபரிமலை நோக்கி சரண கோஷம் முழங்க ராஜபிரதிநிதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது. முன்னதாக பந்தளம் சாஸ்தா கோவிலில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆபரணப்பெட்டிக்கு வரவேற்பு

ஆபரணப்பெட்டிக்கு வரவேற்பு

பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) லாகா சத்திரம் வந்து சேருகிறது. அங்கிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 4 மணிக்கு புறப்படும் ஊர்வலம் மாலை 4 மணிக்கு சரம் குத்தி வந்தடையும். அங்கிருந்து சபரிமலை செயல் அதிகாரி, நிர்வாக அதிகாரிகள் தலைமையில் திருவாபரண பெட்டி பெறப்பட்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாக சன்னிதானம் எடுத்து செல்லப்படும். மாலை 5.30 மணியளவில் வலிய நடைப்பந்தலுக்கு வரும் திருவாபரண பெட்டிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஜோதி வடிவில் ஐயப்பன்

ஜோதி வடிவில் ஐயப்பன்

அதைத்தொடர்ந்து 18ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி சங்கரன் நம்பூதிரி திருவாபரண பெட்டிகளை பெற்றுக்கொள்கிறார். 18ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது 3 முறை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார்.

பொன்னம்பல மேட்டில் பக்தர்கள்

பொன்னம்பல மேட்டில் பக்தர்கள்

இதையொட்டி பொன்னம்பலமேட்டில் தோன்றும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே இடம் பிடித்து விரி, கூடாரம் அமைத்து முகாமிட்டு உள்ளனர். மகர விளக்கு பூஜைக்கு பின் 19ம் தேதி காலை 9.30 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். பின்னர் 21ம்தேதி காலை 7 மணிக்கு ராஜ பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+