Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஷா சரத் வீடியோ விவகாரம் 2 டீன் ஏஜ் சிறுவர்களை கைது செய்தது கேரள காவல்துறை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாபநாசம் படத்தில் நடித்து புகழ் பெற்ற மலையாள நடிகை ஆஷா சரத் வீடியோ விவகாரத்தில், 2 டீன்ஏஜ் சிறுவர்களை கைது செய்து இருக்கிறது கேரள காவல்துறை.

கடந்த மாதம் நடிகை ஆஷா சரத்தின் போலி ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தது, இதனால் கொதித்துப் போன ஆஷா சரத் கேரள காவல் துறையினரிடம் எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை அளித்து இதற்குக் காரணமானவர்களை கைது செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

Malayalam Actress Asha Sarath Fake Video Leak: Two Teenagers Arrested in Kerala

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த கேரள காவல்துறையினர் நேற்று இந்த விவகாரத்தில் சமபந்தப்பட்ட 2 டீன் ஏஜ் சிறுவர்களை மலப்புரம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைதான 2 சிறுவர்களும் மேலும் பல நடிகைகளின் போலி ஆபாச வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர், சைபர் கிரைம் போலீசார் மேற்கண்ட அந்த 2 சிறுவர்களையும் விசாரித்ததில் இந்த உண்மைகள் வெளியே வந்துள்ளன.

கைதான 2 சிறுவர்களின் விவரங்களையும் கேரள காவல் துறையினர் இதுவரை வெளிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dear all.. Thank u very much for the overwhelming care and support extended to me at this time of crisis. I'm thankful...

Posted by Asha sharath on Friday, July 24, 2015

வீடியோ வழக்கு தற்போது முடிவுக்கு வந்ததில் நிம்மதி அடைந்த ஆஷா சரத், தான் இந்த வழக்கை சந்தித்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பேஸ்புக் மூலமாக தனது நன்றியைத் தெரிவித்து உள்ளார்.

உங்கள மாதிரி பாதிக்கப்பட்ட நடிகைகள் துணிச்சலா புகார் கொடுத்தா தான் இந்த மாதிரி தப்பு செய்யறவங்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+