மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர் விடுதலை; மும்பை நீதிமன்றம் உத்தரவு
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 முஸ்லிம் இளைஞர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் உள்ள ஹமிதியா மசூதி அருகே கடந்த 2006 செப்டம்பர் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தரப்பிலும் 9 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கு மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதில் ஒருவர் வழக்கு விசாரணையின் போதே உயிரிழந்துவிட்டார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தது. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications