ராகுலின் யாத்திரை வாகனங்கள் மீது திடீர் ‛‛அட்டாக்’’.. பின்னணியில் பாஜக? சீறிய மல்லிகர்ஜுன கார்கே
திஸ்பூர்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் யாத்திரை வாகனத்தின் மீது சிலர் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியில் இறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது. அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் 'பாரத் ஜடோ நியாய யாத்திரை' என இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரை மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் நீள்கிறது. இறுதியாக மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடந்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.
பயண திட்டத்தின்படி மணிப்பூர், நாகலாந்தில் யாத்திரையை முடித்த அவர், கடந்த 18ம் தேதி அசாமில் யாத்திரையை தொடக்கினார். இம்மாநிலத்தில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கி.மீ தூரமும் பயணம் மேற்கொள்ளகிறார். இந்நிலையில் நேற்றிரவு யாத்திரை வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர்தான் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை பயணம் நுழைந்தது. அப்போது சிலர் யாத்திரையில் அணிவகுத்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மட்டுமல்லாது ராகுல் காந்தி உருவம் அச்சிடப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தெறிந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறுகையில், “அசாமின் லக்கிம்பூரில் யாத்திரையின் வாகனங்கள் மீதான தாக்குதலையும், காங்கிரஸ் கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்த பாஜகவினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க பாஜக முயன்றது. அது அவர்களின் குரல்களுக்கு அடிபணிய விரும்புகிறது, அதன் மூலம் ஜனநாயகத்தை கடத்துகிறது. எனவேதான் இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் தந்திரத்திற்கு காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் மக்களுக்கான அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தை தடுத்துவிட முடியாது” என்று கூறியுள்ளார்.
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications