பெட்ரோல் விலை ஏறிட்டு போகுது பிட்னஸ் சேலஞ்ச் கேக்குதா? மோடியை கலாய்த்த சேட்டன்ஸ்!
மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் விளையாட்டை வைத்து கேரளாவில் மக்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
டெல்லி: பிரதமர் மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் விளையாட்டை வைத்து கேரளாவில் மக்களை அவரை கிண்டல் செய்துள்ளனர். பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் போது பிரதமர் மோடி இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுவதை கண்டித்து கேரளா மக்கள் அவரை வித்தியாசமாக கிண்டல் செய்துள்ளனர்.
ஃபிட் இந்தியா என்பது மோடி தொடங்கி வைத்த இயக்கம். மான் கீ பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் பேசும்போது ஃபிட் இந்தியா குறித்தும் பேசினார் மோடி.இதற்கு அடுத்த இந்த ஃபிட் இந்தியா வைரல் ஆனது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்தோர் ஃபி இந்தியா பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை பகிருங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் தந்த கோஹ்லி, தாம் இந்த சேலஞ்ச்சை ஏற்பதாக கூறி உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். மேலும் பிரதமர் மோடியும் இதை ஏற்க வேண்டும் என அவரது ட்விட்டர் கணக்குக்கு டேக் செய்தார்.இந்த சவாலை ஏற்கிறேன் என பிரதமர் மோடியும் பதிலளித்திருந்தார்.
மோடியின் இந்த செயல் எந்த அளவிற்கு வைரல் ஆனதோ அதைவிட அதிக அளவு பிரச்சனைகளை சந்தித்தது. முக்கியமாக நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் மோடி இப்படி நடந்து கொள்வது மக்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. முக்கியமாக தென்னிந்தியாவில் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் கேரளாவில் மக்கள் இதற்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு, பிட்னஸ் சேலஞ்ச் இரண்டையும் கண்டிக்கும் விதத்தில், மோடிக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பெட்ரோல் பங்குகளில் போராடி இருக்கிறார்கள். நிறைய பெட்ரோல் பங்குகளில் மக்கள் ஒன்றாக கூடி இப்படி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
அதோடு பிட்னஸ் சேலஞ்சை கிண்டல் செய்யும் விதமாக, பெட்ரோல் பங்கில் உடற்பயிற்சி செய்து உள்ளனர். மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே அவர்கள் உடற்பயிற்சி செய்து போராட்டம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications