நிதியை தராமல் இழுத்தடிப்பதா.. சீறிய மம்தா பானர்ஜி! மத்திய அரசை கண்டித்து 2 நாட்கள் தர்ணா
கொல்கத்தா: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிய மத்திய அரசை கண்டித்து, 48 மணி நேர தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகக் கடுமையாக சாடி வருகிறார். மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக விமர்சிக்கும் மம்தா பானர்ஜி, விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகவும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அண்மையில் பேசியிருந்தார்.
48 மணி நேரம் தர்ணா: இந்த நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிர 48 மணி நேர தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பேக்தர் சிலை முன்பாக தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ள மம்தா பானர்ஜி அங்கிருந்தபடியே தனது அரசு பணிகளையும் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள மம்தா பானர்ஜி, பாஜக மட்டும் இன்றி இந்தியா கூட்டணியையும் கடுமையாக சாடியுள்ளார். மம்தா பானர்ஜி கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக மேற்கு வங்காளத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லை.
சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்: வேலை செய்த பிறகும் மக்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் (மத்தியில் இருப்பவர்கள்) சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். அதிபர் முறையிலான ஆட்சி முறையை நோக்கி நீங்கள் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.. ஒரு கட்சி, ஒரு அரசாங்கம்.. ஒரே மொழி... தற்போது ஒருவர் என்ன உடை அணிய வேண்டும்.. என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்" என காட்டமாக கூறினார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications