Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீதீ Vs தன்கர்: போலீசாருக்கு மம்தா போட்ட அதிரடி உத்தரவு.. எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர்

போலீசாருக்கு மம்தா பானர்ஜி புது உத்தரவு பிறப்பித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: எல்லை பாதுகாப்புப் படை அனுமதியின்றி கிராமங்களுக்குள் நுழையக் கூடாது என்று மேற்கு வங்க போலீஸாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த காரணம் கொண்டும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கிராமங்களுக்குள் நுழைந்து விடக்கூடாது என்றும், அப்பாவி மக்கள் சித்ரவதை செய்வதை இனியும் என்னால் பொறுத்து கொள்ள முடியாது என்றும் மம்தா உறுதிபட தெரிவித்துள்ளார். மம்தாவின் இந்த அதிரடிக்கு அம்மாநில ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எப் சட்டம் ஒன்று சமீபத்தில் இயற்றப்பட்டது.. அதாவது, எல்லை பாதுகாப்பு படைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு திருத்தம் செய்திருந்தது.

அதன்படி, எல்லை பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டத்தை தடுப்பதற்காகவும், தேடுதலை மேற்கொள்வதற்காகவும், பஞ்சாப், மேற்கு வங்கம், அசாமில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து 15 கிமீக்கு பதிலாக, 50 கி.மீ., தூரத்திற்குள் சந்தேகத்திற்கு இடமானவற்றை பறிமுதல் செய்யவும், கைது செய்யவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த திருத்தம் செய்யப்பட்டது.

 எதிர்ப்பு

எதிர்ப்பு

எல்லைப்படை மாநில அதிகாரத்திற்குள் தலையிட சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பிரதமர் மோடியுடன் மம்தா நேரடியாகவே பேசினார்.. அந்த முடிவு தவறானது என்றும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் தலையிடும் முயற்சி என்பதால், அந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். எனினும், மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் குறித்த பதட்டமான சூழல் நிலவுகிறது..

 அதிகாரிகள்

அதிகாரிகள்

இது தொடர்பாக எல்லைப் பகுதி காவல்துறை அதிகாரிகளிடமும் பல்வேறு விஷயங்களை விவாதித்து, இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், பிஎஸ்எப் தங்கள் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட கிராமங்களுக்குள் நுழைந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. சட்டம்- ஒழுங்கு என்பது மாநிலத்தின் சட்டத்திற்குப்பட்டது.. அதனால், வங்கதேச எல்லைக்கு அப்பாற்பட்ட கிராம பகுதிகளில் பிஎஸ்எப் நுழைய அனுமதிக்கக் கூடாது.

 அப்பாவி மக்கள்

அப்பாவி மக்கள்

அந்த பகுதிகள் எல்லாம் கூடுதலாக செக்போஸ்ட்களை அதிகரிக்க வேண்டும்.. சோதனைகள் அதிகரிக்க வேண்டும்.. விழிப்புடன் இருக்க வேண்டும்.. நமக்கு வங்கதேசத்துடன் எல்லைகள் இருப்பதால், அதையும் கண்காணிக்க வேண்டும், எந்த காரணம் கொண்டும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கிராமங்களுக்குள் நுழைந்து விடக்கூடாது,.. மாநில எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு உங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.. அப்பாவி மக்கள் சித்ரவதை செய்வதை இனியும் என்னால் பொறுத்து கொள்ள முடியாது" என்றார்.

ஆளுநர்

ஆளுநர்

மம்தாவின் இந்த அதிரடிக்கு அம்மாநில ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக முதல்வர் மம்தாவுக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார். "நேபாளம், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளுடன் எல்லைகளை கொண்ட மாநிலத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது ஆகிய கண்ணோட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையும், மத்திய பாதுகாப்பு படையினரும் மிக முக்கியமான பணியை செய்து வருகின்றனர்..

நல்லுறவு

நல்லுறவு

இப்படிப்பட்டசூழலில், மாநில போலீசாருக்கும், மத்திய படைகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.. ஆனால் மோதலை உருவாக்ககூடாது.. இவர்களுக்கு இடையில் ஒத்துழைப்பு தேவை.. சண்டை கூடாது" என்று எழுதியுள்ளார்.. ஆளுநரின் இந்த கடிதத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி தந்துள்ளது.. ஆளுநர் பாஜக செய்தி செய்தி தொடர்பாளரை போல செயல்படக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+