ஐயம், ஸாரி நரேந்திர மோடி ஜி.. மமதா பானர்ஜி பரபரப்பு அறிக்கை
Recommended Video
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்காக நாளை இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனக்குப் பிடிச்ச அமைச்சர்கள் யார் யார்.. வாங்க ஜாலியா விளையாடலாம்!

கடும் மோதல்
மேற்கு வங்க மாநிலத்தை, பொறுத்தளவில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் சமயத்தில் கடும் வார்த்தை போர்களில் ஈடுபட்டன. மமதா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை கடும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். பதிலுக்கு இவர்களும், பதிலடி கணைகளைத் தொடுத்தனர்.

பதவியேற்பு விழா
இரு கட்சியினர் நடுவே ஆங்காங்கு பெரும் தேர்தல் வன்முறைகள் வெடித்தன. இந்தச் சூழ்நிலைக்கு நடுவேயும் டெல்லியில் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மமதா பானர்ஜி திட்டமிட்டிருந்தார். மம்தா பானர்ஜியின் இந்த ஒப்புதல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
|
மமதா பானர்ஜி மறுப்பு
இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மோடி பதவியேற்பு விழாவுக்கு தான் செல்லப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது: வாழ்த்துக்கள் புதிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களது அழைப்பை ஏற்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு நான் திட்டமிட்டிருந்தேன்.

அரசியல் இல்லை
ஆனால் கடந்த ஒரு மணி நேரமாக நான் பல்வேறு ஊடகங்களிலும் பார்க்கக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகளில், பாஜகவை சேர்ந்த 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் எதுவும் நடக்கவில்லை.

அரசியல் ஆதாயம்
இந்த கொலைகள் தனிப்பட்ட பகை காரணமாகவோ அல்லது குடும்ப தகராறு காரணமாகவோ அல்லது வேறு பிரச்சினைகள் காரணமாகவோ, நடந்து இருக்கலாம். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அதுபோன்ற எந்த ஆதாரமும் கிடையாது. எனவே 'ஐயம் ஸாரி நரேந்திர மோடி ஜி' நான் உங்களது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க போவது கிடையாது. இந்த விழா என்பது ஜனநாயகத்தை கொண்டாடக் கூடிய ஒரு திருவிழா. இதை அரசியல் ஆதாயத்துக்கு எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது. எனவே, ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ. இவ்வாறு மமதா பானர்ஜி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications