For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாபெரும் சதி! மே.வங்கத்திற்கு எதிராக சீக்ரெட் பிளான்! பாஜக செய்வதை நோட் பண்ணுங்க! குண்டை போட்ட மம்தா

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு திரிணாமுல் அரசை எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக கடுமையாகச் சாடி வருகிறது.

இதற்கிடையே மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தங்களுக்கு எதிராகச் சிலர் சதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாக்கப்பட்ட காஞ்சி அர்ச்சகர்-மது போதையில் சண்டை போட்டதை மறைக்க போலீசில் பொய் புகார் தந்தது அம்பலம் தாக்கப்பட்ட காஞ்சி அர்ச்சகர்-மது போதையில் சண்டை போட்டதை மறைக்க போலீசில் பொய் புகார் தந்தது அம்பலம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்திற்கு எதிராகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் சிலர் சதித் திட்டம் தீட்டப்படுவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மேற்கு வங்க பாஜக தலைவர்கள் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதிகளுக்கான நிதியைத் தடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தி வங்காள மக்களுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகவும் அவர் சாடினார்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

ஊழல் வழக்குகளில் திரிணாமுல் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தவறு செய்தவர்களுக்குத் திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேற்கு வங்க அரசு சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட அவர், "மேற்கு வங்கத்திற்கு எதிராக ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாநில அரசு மற்றும் திரிணாமுல் கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

சதி

சதி

வங்காளத்தை விரும்பாதவர்கள் எங்களை இழிவுபடுத்துகிறார்கள்.. இந்த சதித்திட்டங்களைத் தீட்டுகிறார்கள். எதோ சிலர் தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த அமைப்பையும் கேவலப்படுத்த முடியாது.. வேலை செய்யும் போது தவறுகள் நடப்பது சகஜம் தான். சாலையில் நடந்து செல்லும் போது நமக்குக் காயம் ஏற்படத் தான் செய்யும். நமது தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். யாரேனும் தவறு செய்திருந்தால் அதைச் சரிசெய்ய வேண்டும். சட்டம் அதன் கடமையைச் செய்யும்.

பொய் பிரசாரம்

பொய் பிரசாரம்

ஆனால் வங்காளத்தை விரும்பாத சிலர், திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்" என்று அவர் சாடினார். சமீப காலமாகவே பல்வேறு திரிணாமுல் தலைவர்களை மத்திய விசாரணை அமைப்புகள் கைது செய்து வருகின்றனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணாமுல் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா கைது செய்யப்பட்டார். அதேபோல, கடந்த ஜூலை மாதம் அப்போதைய கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போலி செய்தி

போலி செய்தி

தொடர்ந்து பேசிய அவர், "இப்போது யாரும் சேனல்களை இனி பார்க்க வேண்டாம்.. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸை கேவலப்படுத்த வழிகளைத் தேடுகிறார்கள். நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது சிறிய தவறுகளைக் கூட பெரிய விஷமாக்கினார்கள். ஆனால், இப்போது அப்படி எந்தவொரு செய்தியும் வருவதில்லையே அது ஏன்? எல்லாமே திட்டமிடப்பட்டு நடத்தப்படும் பிரசாரம் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

காரணமே பாஜகதான்

காரணமே பாஜகதான்

மேற்கு வங்க அரசை இழிவுபடுத்தும் வெட்கக்கேடான முயற்சிகளில் ஈடுபடுவது வங்காளத்திற்கு எதிரான செயல் இல்லையா? நீங்கள் (மேற்கு வங்க பாஜக தலைவர்கள்) வங்காளத்தில் வாழ்கிறீர்கள், ஆனால் நமக்கு வரும் நிதியைத் தடுக்க வேண்டும் என டெல்லியைக் கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். அவர்களிடமிருந்து எங்கள் உரிமைகளை நாங்கள் பெறுவோம். எங்களுக்கு வர வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Mamata Banerjee says BJP planning Conspiracy against the state: West Bengal latest news in tamil Mamata Banerjee targets BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X