முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்
கொல்கத்தா: தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி சமீபத்தில் தான் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய தினம் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், முதல் நாளே முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே முக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
இந்தச் சூழலில் தான் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி, கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நேற்று பதவியேற்றார். 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விழாவில், கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால், ஆளுநர் ரவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ரவி
இந்தியாவிலேயே மிகவும் பழமையான ஆளுநர் மாளிகையான கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஆளுநர் ரவி பதவியேற்று இருக்கிறார். 1976 பேட்ச் கேரளா கேர்டர் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவி, உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றியவர். இதற்கு முன் 2019 முதல் 2021 வரை நாகாலாந்து ஆளுநராக இருந்துள்ளார். 2019 முதல் 2026 வரை தமிழக ஆளுநராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது இவருக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மோதல்
தமிழ்நாடு சட்டசபை இயற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டார். இதற்காகத் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட் வரை கூட செல்ல வேண்டி இருந்தது. அதேபோல ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை கூட்டத்தொடர் முதலில் கூடும்போது ஆளுநர் உரையுடன் தான் தொடங்க வேண்டும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் ஆளுநர் உரையை ரவி படிக்க முடியாது என மறுத்தார். இதிலும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் தேர்தலுக்கு சில வாரங்களுக்குப் பிறகு, அவர் மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார்.
மம்தா
இதற்கிடையே முதல் நாளே முதல் மம்தாவுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் ஆரம்பித்துவிட்டது. அதாவது பதவியேற்பு விழா முடிந்ததும், முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆளுநரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். அதில் ஆளுநரின் மனைவியும் இருந்தார். அப்போது, ஆளுநரின் மனைவிக்கு மம்தா பானர்ஜி மேற்கு வங்க அரசின் பிஸ்வா பங்களா' கைத்தறி சால்வைகளை அன்பளிப்பாக வழங்கினார்.
முதல் நாளே சம்பவம்
அப்போது மம்தாவிடம் ஆளுநர் ரவி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார். அதை இடைமறித்த மம்தா, "மேற்கு வங்கம் மிகச் சிறப்பானது. அதைச் சுற்றிப் பாருங்கள்.. வங்கத்தின் கலாச்சாரம் தனித்துவமானது. வங்கத்தை நேசிப்பவர்களை வங்க மக்கள் நேசிப்பார்கள்" என்றார். அவர் சொல்லச் சொல்ல ஆளுநர் ரவி முகத்தில் இருந்த சிரிப்பு மெல்ல மறைந்தது. மம்தாவுக்கு பதிலளித்த ஆளுநர் ரவி, "மேற்கு வங்கம் நான் போற்றும் ஆன்மீக, அறிவுசார் மற்றும் கலாச்சாரத் தலைநகரம்" என்று குறிப்பிட்டார்.
மம்தாவும் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தார். பிறகு அவர், "நான் கிளம்புகிறேன். சீக்கிரமே மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினார். முதல் நாளே இப்படி இருவரும் மாறி மாறி கருத்துகளைச் சொல்லியிருக்கும் சூழலில், வரும் நாட்களில் மோதல் மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications