வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே அதிரடியை ஆரம்பித்த மம்தா.. ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாளை மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் மற்றும் புதுவையில் மட்டும் ஆளும்கட்சி தோல்வியடைந்துள்ளது.
கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சியை பிடித்த திரிணாமுல்
குறிப்பாக மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 75 தொகுதிகளில் முன்னிலையில் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் எளிதாகவே வெற்றி பெற்றுள்ளது.

மம்தா அதிர்ச்சி தோல்வி
இருப்பினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், முதலில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு, பின்னர் மீண்டும் தோல்வியடைந்ததாகத் தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளதாகவும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன் என்றும் திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதால், மம்தா பானர்ஜி தனது தோல்வி பற்றி மம்தா பெரிதாகக் கவலை கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அவர் உடனடியாக அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மம்தா பானர்ஜி நாளை மாலை 7 மணிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

மம்தாவால் முதல்வராக முடியும்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிணாமுல் ஆட்சி அமைகிறது. முதலில் 2011இல் ஆட்சி அமைத்த மம்தா, 2016 தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். இந்த முறை மம்தா பானர்ஜி எம்எல்ஏ-ஆக வெற்றி பெறாத போதிலும் அவரால் முதல்வராக முடியும். அடுத்த 6 மாதங்களுக்குள் அவர், சட்டசபை உறுப்பினரால் போதும். கடந்த 2017இல் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், 2016இல் புதுவையில் நாராயணசாமி ஆகியோர் முதல்வரான பின்னரே எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications