மோடி பண மதிப்பிழப்பு செய்தாரே அப்போதுதான் வங்கியில் பெரும் மோசடிகள் நடந்துள்ளது: மம்தா பகீர்
கொல்கத்தா: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதுதான் பெரும்பாலான வங்கி மோசடி நடந்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டில், பெரிய அளவுக்கான பண மோசடிகள் பணமதிப்பிழப்பு நேரத்தில் நடந்துள்ளன. முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அப்படி நடந்த மோசடியின்போது யாரெல்லாம் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்கள்? இன்னும் பல வங்கிகளும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முழு உண்மை வெளியே வந்தாக வேண்டும்" என கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மோடி அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது. கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என அரசு கூறியிருந்தது. ஆனால் கருப்பு பணம் எந்த அளவுக்கு ஒழிந்தது என்பதை அரசு தெளிவாக இன்னும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், மக்கள் பெரும் துயரங்களுக்கு உள்ளானதுதான் மிச்சம்.
மேலும் வங்கிகள் எப்படி சாதாரண விவசாயிகள், சுய உதவி குழுக்களிடம் கடனுக்கு நெருக்கடி தருகின்றன என்பதையும், பெரிய பணக்காரர்கள் பண மோசடியில் ஈடுபடுவதையும் மக்களிடம் எடுத்து கூறி பிரச்சாரம் செய்யுமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பண மதிப்பிழப்பு நேரத்தில்தான் வங்கிகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications