Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேடையிலேயே ஆபீஸ்.. அப்பப்ப வாக்கிங்... பாட்டு.. பேச்சு... கலக்கி வரும் மம்தா!

மேடையிலேயே வழக்கமான அலுவல் பணிகளை மம்தா பானர்ஜி மேற்கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தர்ணா பந்தலிலும் அரசு வேலைகளை கவனிக்கும் மம்தா பனர்ஜி- வீடியோ

    கொல்கத்தா: தர்ணா போராட்டம்ன்னா.. எல்லாம் பொது இடத்துல ஒன்னு சேர்ந்து, வழிமறிச்சி நின்னுக்கிட்டு... கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி கோஷம் போடறதுன்னு நினைச்சீங்களா... இது மம்தா போராட்டம்.. வேற லெவல்ல இருக்கும் என்பதைதான் இந்த 3 நாட்களும் நாட்டு மக்களுக்கு பறைசாற்றி வருகின்றன.

    சிட்பண்ட்' மோசடி வழக்கு தொடர்பாக கல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்துதான் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி 3-வது நாள் போராட்டம் நடத்தி வருகிறார்.

    மம்தா நடத்தி வரும் போராட்டம் சரியா, தவறா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் போராடும் விதம் கவரும் விதமாக இருக்கிறது. திரும்பி பார்க்கும் விதமாக ஈர்க்கிறது. போராட்டம் நடத்துவதற்கு முன்பே தெளிவாக ஒரு விஷயத்தை அறிவித்துவிட்டார் மம்தா.

    தெளிவுபடுத்தினார்

    தெளிவுபடுத்தினார்

    "நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தைக் காக்க வலியுறுத்தி தர்ணாவை நடத்துகிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். உருவ பொம்மைகள் எரிக்க வேண்டாம். 8-ம் தேதி வரைக்கும் இப்படித்தான்" என்று தெளிவுபடுத்தினார்.

    26 நாட்கள் உண்ணாவிரதம்

    26 நாட்கள் உண்ணாவிரதம்

    எளிமை, அறிவு, போராட்டகுணம், மொழிப்பற்று, பேச்சுத்திறமை, இசை நாட்டம், விளையாட்டு ஆர்வம், ஓவியர், கவிஞர், என ஒன்றையும் விட்டு வைக்காத மம்தா இந்த தர்ணா மேடையிலேயே பல்வேறு குணாதிசயங்களை காட்டி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகத்திற்குள் தன்னை அனுமதிக்காததை கண்டித்து 26 நாட்கள் மம்தா தொடர் உண்ணாவிரதம் இருந்து எல்லாருக்கும் ஷாக் தந்தவர் ஆச்சே.. இந்த மறியல் எல்லாம் அக்காவுக்கு எம்மாத்திரம்?

    கூட்டத்தை அடக்குகிறார்

    கூட்டத்தை அடக்குகிறார்

    இந்த தர்ணாவில் முதல் விஷயமாக அமைதி தென்படுகிறது. கூச்சல், குழப்பம், கோஷங்கள், கண்டனக்குரல்கள் என ஒன்றையும் காணோம். திடீரென கூட்டம் அதிகமானால் கைகளாலேயே சைகை செய்து அத்தனை கூட்டத்தையும் அடக்கி வைக்கிறார்.

    ஃபைல்கள் சரிபார்ப்பு

    ஃபைல்கள் சரிபார்ப்பு

    அடுத்ததாக, போராட்டம் என்றால் வேலை செய்யக்கூடாதா என்ன? கட்சி மேடையையே ஆபீசாக்கி விட்டார் நம்ம அக்கா. மேடையிலேயே ஃபைல்கள் வருகின்றன. அதை பிரித்து படித்து சரி செய்கிறார். எதிர்ப்பு என்பது எதிர்க்கட்சிகளுக்குதானே தவிர, தன்னுடையை வேலைகளை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்து கொள்கிறார்.

    ஒரு கவலையும் இல்லை

    ஒரு கவலையும் இல்லை

    இது மட்டுமல்ல, எப்பவுமே சுறுசுறுப்பாக இருக்கும் மம்தாவின் ரகசியம் இங்கதான் இருக்கிறது. காலையில் எழுந்து மேடையிலேயே வாக்கிங். நம்மை சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே, நாடே நம் செயல்பாடுகளை கவனிக்கிறதே, என்றெல்லாம் ஒரு கவலையும் இல்லை.

    பதக்கம் வழங்கினார்

    மனதில் உறுதிப்பிடிப்பு இருந்தாலும் அதை முகத்தில் காட்டி கொள்வதில்லை. ரொம்ப கூலாக இருக்கிறார். மேடையின் அருகிலேயே காவல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போய் உரையாற்றவும் செய்தார். இதில் ஹைலைட் என்னவென்றால், சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு மெடல் தந்துவிட்டு வந்ததுதான்.

    கலக்குகிறார் அக்கா

    கலக்குகிறார் அக்கா

    திடீரென மைக்கை வாங்கி மதவெறி, ஊழல், ஆர்எஸ்எஸ் என பாஜக கும்பலை கதறவிட்டு ஒரு பிடிபிடித்து விடுகிறார். பிறகு திடீரென ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். ஆக மொத்தம் மேடையிலேயே ஆபீஸ் வேலை... வாக்கிங்... பாட்டு.. பேச்சு... என நாட்டையே கலக்கி வருகிறார் மம்தா!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+