பல இரவுகள் சோறு போடாமல் பட்டினி போட்ட மனைவி... வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் மூழ்கியதால் கொன்ற கணவர்
மேற்கு வங்க மாநிலத்தில் சோறு போடாமல் எப்ப பார்த்தாலும் வாட்ஸ் ஆப்பில் மூழ்கியிருந்த மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ,கொல்கத்தாவில் பல இரவுகள் தனக்கு உணவு கூட அளிக்காமல் வாட்ஸ் ஆப்பே உலகம் என்றிருந்த மனைவி மீது சந்தேகம் அடைந்து கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கொல்கத்தாவில் சேட்லா எனும் இடத்தில் ஹௌரா ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சுராஜித் (42). இவரது மனைவி தும்பா பால் (36). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
தும்பா பால் எந்த நேரமும் தனது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட்டு கொண்டிருப்பார். இதை கணவர் சுராஜித் கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

தும்பா பால் சடலமாக கிடந்தார்
இந்நிலையில் தும்பா பால் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சுராஜித்திடமும் விசாரணை நடைபெற்றது.

பேனில் துணி
வீடு முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல் செட்டப் செயவதற்காக துணி ஒன்று இருந்தது. தும்பா பால் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததால் இந்த செட்டப்பை பார்த்த போலீஸார் சந்தேகமடைந்தனர். மேலும் சுராஜித்தின் கைகளிலும் காயம் இருந்தது.

சுராஜித்திடம் விசாரணை
அப்போது சுராஜித்தின் இளைய மகனிடம் விசாரணை நடத்தியபோதுதான் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்பது தெரியவந்தது. அதுவும் தனது தந்தைக்கு தன தாயின் தங்கையுடன் தொடர்பிருப்பது தும்பா பாலுக்கு தெரிய வந்தவுடன் தகராறு அதிகரித்ததாகவும் இளைய மகன் கூறினார். மேலும் கொலை நடந்த அன்று தனது தந்தை அவருடைய பேகையும், செல்போனையும் வீட்டிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சுராஜித்துடன் விசாரணை நடத்தியதில் அவர்தான் தும்பாபாலை கொலை செய்தது தெரியவந்தது.

சமையல் இல்லை
இதுகுறித்து சுராஜித் அளிக்க வாக்குமூலத்தில், எனது மனைவி எப்போ பார்த்தாலும் செல்போனே கதி என்று கிடப்பார். இதனால் எனக்கு பல இரவுகளில் அவர் சாப்பாடு பரிமாறுவதையும் விட்டுவிட்டார். இதை பல முறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. மேலும் அவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. சம்பவதினத்தன்று எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தலையில் கத்தியால் குத்தியும் அவர் சாகவில்லை. எனவே அவரது கழுத்தை நெரித்து கொன்றேன். நானும் தற்கொலை செய்து கொள்ள கையை கிழித்துக் கொண்டேன், பேனில் துணியை மாட்டினேன் எனினும் சாவதற்கு எனக்கு தைரியம் இல்லாததால் விட்டுவிட்டேன். தும்பா பாலை திட்டமிட்டே கொன்றேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications