பெங்களூரில் வீடு புகுந்து கத்தி முனையில் 2 பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மடக்கி பிடிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வீடு புகுந்து கத்திமுனையில் மிரட்டி இரு பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, சமயோஜித புத்தியால் போர்வையை போட்டு மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூர் கோரமங்களா 3வது பிளாக்கில் வசிப்பவர் லென் (31). தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாக வேலை பார்க்கிறார். இவர் திருமணம் செய்யப்போகும் பெண் இசுமி (30), கன்னிங்காம் ரோட்டிலுள்ள ஒரு முன்னணி உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று லென் வீட்டுக்கு இசுமி வந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஸ்டாசி (28)யும் அங்கு வந்துள்ளார். இவர்கள் அனைவருமே நாகாலாந்து மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

Man arrested who tried to rape two women in Bangalore

டிவி பார்த்தனர்

மூன்று பேருமாக அமர்ந்து ஹாலில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முக்கிய கதவு லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். உள்ளே நுழைந்த வாலிபர், வீட்டு கதவை உட்புறமாக தாழிட்டுவிட்டு, தனது கையில் இருந்த கத்தியை காண்பித்து மிரட்டி வீட்டிலுள்ள பணத்தை தருமாறு கூறியுள்ளான்.

பணம் கிடைக்கவில்லை

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்த மூவரும் சுதாரித்துக் கொண்டு, தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளனர். மேலும், அலுவலகத்தில் இன்னும் சம்பளம் தரவில்லை என்றும் கூறியுள்ளனர். அவர்கள் பேச்சில் நம்பிக்கையில்லாத கொள்ளையன், வீட்டுக்குள் சென்று பணத்தை தேடி பார்த்துள்ளான். ஆனால் பணம் தேறவில்லை.

செக்ஸ் மிரட்டல்

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், பணம்தான் இல்லை, என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இசுமியை மிரட்டியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, கழுத்தில் கத்தியை அழுத்தி பிடித்தபடி உடலுறவுக்கு வற்புறுத்தியுள்ளான். மிரண்டு போன இசுமி, தற்போது தனக்கு மாதவிடாய் இருப்பதால் உடலுறவு வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி கெஞ்சியுள்ளார்.

உள்ளாடையில் ரத்த கறை

இதை நம்பாத, கொள்ளையன், செக்ஸ் வைத்துக்கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது ஆடைகளை அவிழ்த்த இசுமி, உள்ளாடையில் ரத்தக் கறை படிந்துள்ளதை சுட்டிக்காண்பித்துள்ளார். பணமும் கிடைக்கவில்லை, பெண்ணும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த கொள்ளையனின் கவனம் அருகே நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண் ஸ்டாசி மீது போனது.

அடுத்த பெண்மீது தாவிய கொள்ளையன்

'அவருக்குதான் மாதவிடாய் உள்ளது, என்னுடன் நீ செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்' என்று ஸ்டாசியின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளான் கொள்ளையன். இதனால் அந்த வீடு மேலும் அல்லோகலப்பட்டது. அப்போதுதான் லென்னும், இசுமியும் ஒரு ஐடியா செய்தனர். "கொள்ளையன் என்ன செய்ய செய்தாலும் செய். அப்போதுதான் யோசிக்க எங்களுக்கு நேரம் கிடைக்கும்" என்று ஸ்டாசியிடம், தங்களது தாய் மொழியில் இருவரும் கூறியுள்ளனர். இதை ஸ்டாசியும் ஏற்றுக்கொண்டார்.

பலாத்கார முயற்சி

இந்நிலையில், லென் மற்றும் இசுமியை படுக்கையறையில் தள்ளிய கொள்ளையன், கதவை வெளிப்புறமாக தாழிட முயன்றான். ஆனால் வெளியே பூட்டும் வசதி படுக்கையறை கதவுக்கு இல்லை என்பதால் ஓங்கி சாத்திவிட்டு இசுமியை ஹாலில் வைத்து பலாத்காரம் செய்ய தொடங்கினான். கொள்ளையின் மிரட்டலுக்கு பயந்து, இசுமி ஆடைகளை அவிழ்த்து போட தொடங்கினார். அப்போது, கொள்ளையனும் கத்தியை கீழே வைத்துவிட்டு சட்டையை கழற்றினான். அதன்பிறகு பேண்ட்டை கழற்ற முற்பட்டான்.

மடக்கி பிடிப்பு

இந்த சம்பவங்களை படுக்கையறையில் இருந்தபடி கதவு இடைவெளி வழியாக பார்த்துக் கொண்டிருந்த லென்னும், இசுமியும், பெட்டில் கிடந்த போர்வையை தூக்கிக் கொண்டு ஹாலுக்கு ஓடிவந்து கொள்ளையனை போர்த்தி பிடித்தனர். அவன் திமிறி எழுவதற்குள், படுக்கையறைக்குள் தள்ளி வெளியே நின்றபடி கதவை இழுத்து பிடித்துக் கொண்டனர். இதன்பிறகு ஸ்டாசி வெளியே ஓடிச் சென்று பக்கத்து வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உள்ளூர் திருடன்

போலீசார் விரைந்து வந்து அரை நிர்வாணமாக நின்ற கொள்ளையனை கையும் களவுமாக பிடித்துச்சென்றனர். விசாரணையில், கொள்ளையன், பெங்களூர் லட்சுமண் நகர் குடிசை பகுதியை சேர்ந்த மெல்வின் அந்தோணி (20) என்று தெரியவந்தது. பைக் திருடனான மெல்வின் அந்தோணி, இந்த சம்பவத்துக்கு ஒருநாள் முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். திகில் திரைப்படத்தை போன்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+