ஓவர் போதை.. 18 யானைகளுடன் சண்டையிட்ட நபர் பரிதாபப் பலி!
போதையில் யானைகளுடன் சண்டையிட முயற்சித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஞ்சி: ஜார்கண்ட்டில் குடி போதையில் யானைக் கூட்டத்திடம் சண்டை போட முயற்சித்த நபர், யானைகளால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் கக்சாவைச் சேர்ந்தவர் மனேல் ஹெம்ப்ரோம் என்ற 30 வயது இளைஞர். கடந்த திங்களன்று வனப்பகுதியை ஒட்டிய இவரது குடியிருப்புப் பகுதியில் 18 யானைகள் கூட்டமாக நுழைந்தது. கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் யானைக் கூட்டம் துவம்சம் செய்துள்ளது. இதனால் பயத்தில் அலறிய கிராமமக்கள், பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடி ஒளிந்துள்ளனர்.

இதனை எல்லாம் குடிபோதையில் இருந்த மனேல் பார்த்துள்ளார். யானைகள் மீது கோபம் கொண்ட அவர், அவற்றின் முன் சென்று சினிமா பாணியில் சண்டையிட முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யானைகள், மனேலை பலமாகத் தாக்கின. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாங்கள் எவ்வளவோ தடுத்தும் போதையில் இருந்த மனேல் அவற்றைப் பொருட்படுத்தாமல் யானைகள் முன் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications