மும்பையில் வெங்காயம் கேட்டவரை அடித்து நொறுக்கிய ஹோட்டல் ஊழியர்கள்!!

தெற்கு மும்பையில் உள்ள பைகுல்லாவில் இருக்கும் பிரின்ஸ் அலி கான் மருத்துவமனையில் பணிபுரிபவர் மயூர் பிராடி ஜாதவ்(23). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஷாலிமார் உணவகத்திற்கு சென்றார். அவர்கள் சிக்கன் வருவல் மற்றும் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்தனர்.
அவர்களுக்கு உணவுடன் ஒரு பிளேட் வெங்காயம் மட்டும் கொடுக்கப்பட்டது. அது போதவில்லை என்பதால் மேலும் வெங்காயம் கொண்டு வருமாறு ஜாதவ் வெயிட்டரிடம் தெரிவித்தார். வெகு நேரமாகியும் வெங்காயம் வராததால் ஜாதவ் வெயிட்டரை அழைத்து வெங்காயம் கேட்டார். அதற்கு வெயிட்டர் வெங்காய விலை ஏறிவிட்டதாக தெரிவித்தார். ஜாதவோ வெங்காய விலை குறைந்துவிட்டது என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மற்றொரு வெயிட்டர் வந்து ஜாதவின் சட்டையை பிடிக்க மற்றொருவர் உணவகத்தில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஷட்டரை மூடினார்.
பின்னர் வெயிட்டர்கள் ஜாதவை தாக்கினர். ஒரு வெயிட்டர் கண்ணாடி டம்ப்ளரை வீசியதில் ஜாதவின் கண் அருகே பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து ஜாதவ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் முகமது ரிஸ்வான் ஜியாவுத்தீன் அகமது மற்றும் ப்ரிஜ்பான் ஆசாராம் சிங் ஆகிய 2 வெயிட்டர்களை கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications