ஜார்க்கண்டில் பயங்கரம்: ஆசிரியையின் தலையை வெட்டி எடுத்து 5 கி.மீ. ஓடிய நபர்
ராஞ்சி: ஜார்க்கண்டில் பள்ளி ஆசிரியையின் தலையை வெட்டி அதை எடுத்துக் கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள கப்ரசாய் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தவர் சுக்ரா ஹெசா(30). நேற்று பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டபோது அங்கு வந்த ஹரி ஹெம்பிராம்(26) சுக்ராவை பிடித்து இழுத்துச் சென்றார்.

தனது வீட்டிற்கு அருகில் வந்த பிறகு தான் வைத்திருந்த வாளால் ஆசிரியையின் தலையை துண்டித்தார் ஹரி. அதன் பிறகு துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரியை தேடியபோது அவர் ஆசிரியையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சென்றது கண்டிபிடிக்கப்பட்டது.
ஹரி தனது கையில் 2 வாள்கள் வைத்திருந்ததால் பொதுமக்கள் அவர் அருகில் செல்ல அஞ்சினார்கள். போலீசார் ஹரியை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ரன்விஜய் சிங் கூறியதாவது,
ஹரி மனநலம் பாதிக்கப்பட்டவர். பள்ளிக்கு அருகே தனியாக வசித்து வருகிறார். அவர் ஆசிரியையை கொலை செய்ததும் பொதுமக்கள் அவர் மீது கல்லெறிந்தனர். இதையடுத்து அவர் துண்டிக்கப்பட்ட தலையுடன் காட்டுக்குள் சென்று புதரில் மறைந்து கொண்டார். அவரை கைது செய்த பிறகு மக்கள் அவரை தாக்கத் துவங்கினர். அவர்களிடம் இருந்து ஹரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications