பினராயி விஜயனை நோக்கி கத்தியுடன் ஓடிய நபர்.. தக்க நேரத்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு.. பரபரப்பு
Recommended Video

டெல்லி: டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது கத்தியால் ஒரு நபர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் தங்கி உள்ளார். இன்று காலை 10 மணிக்கு அங்கிருந்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக கிளம்பினார். அவரிடம் பேட்டி கேட்பதற்காக பத்திரிகையாளர்கள் அவரது அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்து நின்றிருந்தார். இதை கவனித்த சில பத்திரிக்கையாளர்கள் நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். இதனால் உஷாரான அந்த நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு கேரள முதல்வர் அறை நோக்கி முன்னேறினார். இதை பார்த்த பத்திரிகையாளர்கள் எச்சரிக்கை குரல் எழுப்பினர்.
இதையடுத்து கேரள இல்லத்தில் உள்ள பாதுகாப்பு வீரர்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து முதல்வரின் தனிப் பாதுகாவலர்கள் விரைந்து வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கேரள முதல்வரின் பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து இதன் மூலம் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட அந்த நபர் பெயர் விமல்ராஜ் என்று தெரியவந்துள்ளது. ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரா என்ற பகுதியை சேர்ந்தவர். இவர் ஏற்கெனவே திருவனந்தபுரத்தில் ஒருமுறை தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதும், தற்போது முதல்வர் முன்னிலையில் கத்தியால் குத்திக் தற்கொலை செய்யவே, அவர் முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலை வாய்ப்பு கேட்டு கையில் பல கோப்புகளை வைத்திருந்ததாகவும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவரை போல வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications