கள்ளக்காதலி, 5 வயது மகளை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய பேங்க் மேனேஜர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வங்கி மேனேஜர் ஒருவர் தனது கள்ளக் காதலி மற்றும் அவரின் 5 வயது மகளை கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி மூன்று பைகளில் போட்டு அதை ஆற்றில் போடுகையில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மேனேஜர் சமரேஷ் சர்கார்(47). அதே பகுதியில் தனது 5 வயது மகள் தீபஞ்சனாவுடன் வசித்து வந்தவர் சுசிதா சக்ரபர்த்தி(34). கணவரைப் பிரிந்து வாழ்ந்த அவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தையான சமரேஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுசிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சமரேஷை வலியுறுத்தி வந்துள்ளார். நேற்று சமரேஷ் சுசிதாவின் வீட்டிற்கு சென்றபோது திருமணம் தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமரேஷ் தாயையும், மகளையும் கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி 3 பைகளில் போட்டு அவற்றை ஹூக்ளி ஆற்றில் போட சென்றார்.
படகில் மூன்று பைகளுடன் ஏறிய அவர் ஒரு பையை ஆற்றில் போட்டார். மீதமுள்ள பைகளை ஆற்றில் போடும் முன்பு படகில் இருந்த சக பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து பையை திறந்து பார்த்தபோது அவற்றில் ஒரு பெண் மற்றும் சிறுமியின் உடல் துண்டு, துண்டாக இருந்தது. மேலும் ஆற்றில் வீசப்பட்ட பையையும் போலீசார் மீட்டனர். இது குறித்து சமரேஷை போலீசார் கைது செய்தனர்.
சமரேஷ் போலீசாரிடம் கூறுகையில், சுசிதா தனது மகளை நீரில் முக்கி கொலை செய்து, தன்னுடைய கழுத்தை கத்தியால் அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாது என்று நான் அவர்களின் உடல்களை வெட்டி ஆற்றில் வீச முயன்றபோது சிக்கினேன் என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications