For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோயாளியைப் பார்க்க வந்தவர் நாற்காலியிலேயே மாரடைப்பால் மரணம்

Google Oneindia Tamil News

குவாலியர்: மருத்துவமனை வளாகத்தில் உள்ள நாற்காலியிலேயே மாரடைப்பால் பலியான ஒருவரின் சடலம் இரவு முழுவதும் இருந்துள்ளது. ஆனால், அதனை மருத்துவமனை ஊழியர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பது தான் அவலம்.

குவாலியரில் உள்ளது ஜே.ஏ.எச். மருத்துவமனை. அங்கு சிகிச்சைப் பிரிவில் போடப்பட்டுள்ள நாற்காலியில் நேற்று ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

ஆனால், அதனை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் யாரும் கவனிக்கவில்லையாம். இரவு முழுவதும் அவரின் உடல் அதே நாற்காலியிலேயே இருந்துள்ளது. காவலர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், மற்ற நோயாளிகள் யாருக்குமே அவர் நாற்காலியிலேயே இறந்துள்ளது பற்றி தெரியவில்லை.

போலீசாரின் விசாரணையில் மரணமடைந்தவரின் பெயர் மோனு என்பதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நோயாளி ஒருவரைப் பார்க்க வந்ததும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மோனு இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

English summary
In a shocking incident, a man was found dead on a chair at JAH Hospital’s trauma center. The body of the deceased was found sitting on the chair. It appeared that the man had died there only. Doctors have informed the police. The body has been sent for post mortem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X