டெல்லியில் 'செல்லக்குட்டி'யை காப்பாற்ற நீரில் குதித்த வாலிபர் பலி
டெல்லி: கிழக்கு டெல்லியில் நீர் கால்வாயில் விழுந்த தனது செல்ல நாயை காப்பாற்ற நீரில் குதித்த வாலிபர் பலியானார்.
கிழக்கு டெல்லியை சேர்ந்தவர் பல்ராம்(20). அவர் திங்கட்கிழமை மாலை தனது செல்ல நாயுடன் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இரவு 9.45 மணி அளவில் புதிய அசோக் நகர் பகுதியில் உள்ள நீர் கால்வாய் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது பல்ராமின் நாய் நீரில் விழுந்துவிட்டது. இதை பார்த்த பல்ராம் நாயை காப்பாற்ற நீரில் குதித்தார். ஆனால் அவர் நீரில் மூழ்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர் வந்த வேகத்தில் நாயை காப்பாற்றி நீரில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். ஆனால் பல்ராமை தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் இரவு 11.45 மணிக்கு அவரின் உடல் கிடைத்தது. உடனே மருத்துவமனைக்கு பல்ராமை தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications