பெங்களூரில் கொடூரம்.. கடனை திருப்பி தராத நண்பரின் தலையை துண்டித்த வாலிபர்
பெங்களூரு: கடனை திருப்பி கொடுக்க மறுத்த நண்பரின் தலையை அரிவாளால் துண்டித்த வாலிபர் ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் போலீசில் சரணடைந்த சம்பவம் பெங்களூருரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சசிகுமார்(24). இவரும் அதே பகுதியில் வசிக்கும் கார் டிரைவர் மஞ்சுநாத்(23) என்பவரும் நண்பர்கள். சசிகுமார் தனது நண்பர் மஞ்சுநாத்துக்கு அவசர தேவைக்காக ரூ.25 ஆயிரம் கடனாக கொடுத்திருந்தார்.

பல மாதங்கள் ஆகியும் மஞ்சுநாத் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மஞ்சுநாத்தின் வீட்டிற்கு சென்ற சசிகுமார் கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மஞ்சுநாத் வழக்கம் போல் தர மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சசிகுமார், தான் எடுத்து கத்தியால், மஞ்சுநாத்தின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சுருண்டு கீழே விழுந்ததும், தலையை மட்டும் துண்டித்து பைக் பெட்டியில் வைத்து கொண்டு, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார்.
அங்கு போலீசார் முன்பு ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் சரணடைந்த அவர், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் கொலை செய்ததாக கூறினார். அவரது வாக்குமூலத்தை பெற்ற போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications