பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பரபரப்பு.. 12வது மாடியில் இருந்து கீழே குதித்து ஊழியர் தற்கொலை
Recommended Video

பெங்களூர்: பணி செய்யும் இடத்தில் பனிரெண்டாவது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர் பெயர் பவேஷ் ஜெய்ஸ்வால் என்று தெரியவந்துள்ளது. 23 வயதாகும் இவர் மகாதேவபுரா அப்பகுதியில் வசித்து வந்தார்.

ஒயிட்பீல்டு ஐடிபிஎல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பிஸினஸ் அனலைசிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடமாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பவத்தன்று, 12வது மாடியில் உள்ள பாத்ரூமுக்கு ஜெய்ஸ்வால் சென்றுள்ளதும், அங்கே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் சக ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஜெய்ஸ்வாலின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு யாருக்காவது பேசினாரா, யாருக்காவது மெசேஜ் அனுப்பினாரா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் எதுவுமே கிடைக்கவில்லை. எனவே அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications