Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகனின் பர்த் டே பார்டிக்கு வராததால் ஆத்திரம்... பாட்டியை அடித்துக் கொன்ற பேரன்

Subscribe to Oneindia Tamil

குர்கான்: ஹரியானாவில் மகனின் பிறந்த நாள் விழாவுக்கு வராத பாட்டியை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் பெடகாபாத் நகரைச் சேர்ந்த மூதாட்டி ரமாதேவி (70வயது). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இவருக்கும் இடையே சொத்து பிரச்னையில் முன் விரோதம் இருந்துள்ளது.

Man kills grandmother over not attending his sons party in Haryana

இந்நிலையில் ரமாதேவியின் பேரன் விக்கி (22வயது), இவர் புதிதாக பிறந்த மகனுக்கு பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் ரமாதேவி பங்கேற்கவில்லை.

இதனால் தனது பாட்டி பங்கேற்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்து விக்கி, நேராக பாட்டி ரமாதேவியின் வீட்டுக்கு சென்று அவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி, இரும்பு கம்பியை பாட்டியின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் மயங்கி விழுந்த ரமாதேவியை அவரது கணவர் ராம் அவ்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே ரமாதேவி உயிரிழந்தார்.

இந்நிலையில் ரமாதேவியின் கணவர் ராம் அவ்தார் அளித்த புகாரை ஏற்று அவரது பேரன் விக்கி, அவரது மகன் ஜெய்குமார், மருமகள் நிர்மலா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சனிக்கிழமை மாலை 3 பேரையும் ஹரியானா போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+