பிற ஆண்களுடன் போன், ஃபேஸ்புக்கில் அரட்டை: மனைவியை ஆற்றில் தள்ளி கொன்ற கணவன்
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் பிற ஆண்களுடன் போன் மூலம் அரட்டை அடித்ததுடன், ஃபேஸ்புக்கிலும் சாட் செய்த மனைவியை கணவர் கங்கை நதியில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ரவி சவ்ராசியா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது முதல் மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு ரவி ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ரூபி பிற ஆண்களுடன் போனில் அரட்டை அடிப்பதுடன், ஃபேஸ்புக்கிலும் சாட் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கங்கை நதிக்கரை பக்கம் அவர்கள் சென்றபோதும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரூபி நான் கங்கையில் குதித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் ரவியோ நிஜமாகவே ரூபியை கங்கை நதியில் தள்ளிவிட அவர் நீரில் மூழ்கி பலியானார். ரூபி நீரில் மூழ்கியதும் ரவி அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரூபியின் உடல் ஞாயிற்றுக்கிழமை இரவு நதியில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications