அடுத்து குளிப்பாட்டி, தலை சீவி, முகத்தில் பவுடர் பூசி.. "உம்மா" கொடுத்து ஓட்டு கேட்பார்களோ!
ஷூ பாலிஷ் போட்டு ம.பி. வேட்பாளர் வாக்கு சேகரிக்கிறார்.
Recommended Video

போபால்: இன்னும் நாம என்னென்ன கூத்தையெல்லாம் பாக்கணுமோ... தெரியவில்லை!! இந்த ஐந்து மாநில தேர்தல் மக்களை படாதபாடு படுத்தி வருகிறது.
அடுத்த மாசம் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா என 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக 5 மாநிலங்களிலும் விறுவிறுவென பிரச்சாரம் நடந்து வருகிறது. காங்கிரஸ் ஒரு பக்கம், பாஜக ஒரு பக்கம் என களம் இறங்கி தீயாக வேலை பார்த்து வருகிறார்கள்.

அக்கப்போர் பிரச்சாரம்
இதற்கு நடுவில் சுயேச்சை வேட்பாளர்களின் அக்கப்போர் பிரச்சாரம் வேறு நடந்து வருகிறது. ஒரு காலத்தில் செய்த சாதனைகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தனர் வேட்பாளர்கள். ஆனால் இன்று படு கேவலமான நிலைக்கு அவர்கள் இறங்கி விட்டனர்.

ஷூ - சின்னம்
ராஷ்டிரிய ஆம் ஜனதா கட்சியை சேர்ந்தவரும் வரப்போகிற தேர்தலில் போட்டியிட போகிறார். அதற்காக இவர் ஷூ சின்னத்தில் நிற்கிறார். தனது சின்னம் ஷூ என்பதால், எங்க போனாலும் கையில் ஷூ-வை கொண்டு போய் வாக்கு கேட்கிறார்.

ஷூ பாலிஷ்
அதோடு விட்டால்கூட பரவாயில்லை, தொகுதி மக்கள் யாராவது காலில் ஷூ போட்டிருந்தால் போதும், உடனே தரையில உட்கார்ந்து கொண்டு கடகடவென ஷூ பாலிஷ் போட ஆரம்பித்து விடுகிறார். பளிச்சென பாலிஷ் போட்டு முடித்துவிட்டு, என் சின்னம் ஷூ-விற்கே நீங்க ஓட்டு போடணும் என்று சொல்கிறார். இப்படி மக்களிடம் ஷூ பாலிஷ் போட்டு சுத்தம் செய்வதால் அவர்களின் ஆசீர்வாதம் ஸ்ட்ரைட்டா இவருக்கு கிடைக்கிறது என்று இவர் சொல்கிறார்.

செருப்பால அடிங்க
இப்படித்தான் தெலுங்கானா வேட்பாளர் ஒருவர் செருப்பை கொண்டு போய் தொகுதி மக்களிடம் கொடுத்து, தேர்தலில் ஜெயித்து வந்தபிறகு நான் சரியாக உங்களையெல்லாம் கவனித்து கொள்ளவில்லை என்றால் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள் என்று சொன்னார். இப்போது ஷூ பாலிஷ் வேலை நடக்கிறது. அடுத்து உட்கார வைத்து குளிப்பாட்டி, டிரஸ் போட்டு பவுடர் தடவி முகத்தில் உம்மா கொடுத்து விட்டுச் செல்வார்கள் போல!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications