புருஷன் கண்டித்ததால்.. கள்ளக்காதலை கை விட்ட பெண்.. காதலன் செய்த கொடூர செயல்!
உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டிற்குத் தெரியாமல் பிற ஆணுடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு அதே நபரால் ஆசிட் வீச்சு பரிசாக கிடைத்துள்ளது. தகாத உறவினால் முகம் வெந்து போய் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஷாஜகான்பூர்: கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ வேறு தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது இன்றைக்கு சகஜமாகி வருகிறது. ஆசையாக ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு சில நேரங்களில் ஆபத்தாகவும் மாறி விடுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 45 வயது பெண்ணின் கள்ளத் தொடர்பு அவரது உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது. உறவை முறித்துக் கொள்வதாக கூறிய அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றி கொல்ல முயற்சி செய்திருக்கிறான் ஒரு கயவன்.

கணவன் குடும்பம் என்று வாழ்ந்த அந்த பெண்ணிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நட்பு கிடைத்தது. கணவனை விட இவன் நன்றாக கவனிக்கிறானே என்று நினைத்ததன் விளைவு, கள்ளத் தொடர்பாக மாறியது. மன ரீதியான நெருக்கம் உடல் ரீதியாக மாறியது. கணவனுக்கு தெரியாமல் அந்த ஆணுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்தார்.
எத்தனை நாளைக்குத்தான் மறைக்க முடியும். மனைவியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அவளின் கணவன், கள்ளத் தொடர்பை கண்டித்தார். குடும்பத்தில் புயல் வீசத்தொடங்கியதை அடுத்து தவறான தொடர்பை துண்டித்தார் அந்த பெண். போன் கூட பேசுவதில்லை. இதனால் வெறுப்பான அந்த நபர், கடைசியாக ஒருமுறை தனிமையில் சந்திக்கலாம் என்று அழைத்தான். ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுத்து விட்டாள்.
பெண்ணைத் தேடி வீட்டிற்கே வந்த அந்த நபர், பலாத்காரம் செய்து விட்டு போகும் போது முகத்தில் ஆசிட் வீசிவிட்டு சென்று விட்டான். அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தனக்கு நேர்ந்த கொடுமைப் பற்றி போலீசிலும் புகார் அளித்தார். பெண் மீது ஆசிட் வீசிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பான குடும்ப உறவுகளை விட்டு விட்டு தவறான உறவுகளை தேர்வு செய்ததன் மூலம் கடைசியில் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகிவிட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications