பாஜக சார்பில் எம்பி தேர்தலில் போட்டியிடுகிறார் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு
ஹைதராபாத்: வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு.
இவர் நடிகரும் முன்னாள் எம்பியுமான மோகன் பாபுவின் மகள்.
மோகன் பாபு
எம்பி பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியிலில் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல், மீண்டும் சினிமா பக்கம் போய்விட்டார் மோகன்பாபு. அவரது அரசியலை இப்போது மகள் லட்சுமி மஞ்சு முன்னெடுக்க ஆசைப்படுகிறார்.

அறிவிப்பு
இதனை வெளிப்படையாக மீடியாக்காரர்களிடம் அறிவித்த மோகன் பாபு, இந்தத் தேர்தலில் எம்பி பதவிக்கு என் மகள் போட்டியிடுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது என்றார்.
பணம்தான்
அவர் கூறுகையில், "பணம் செலவழிக்காவிட்டால் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்பதுதான் நாட்டின் இன்றை அரசியல் நிலைமை. நான் மீண்டும் பதவிக்கு போட்டியிடவோ, பிரச்சாரம் செய்யவோ கூட விரும்பவில்லை. ஆனால் அரசியல் கட்சிகள்தான் என் மகளை அழைக்கிறார்கள்.
அரசியல் வேண்டாம்மா..
அவளுக்கு திருமணமாகி கணவனுடன் இருக்கிறாள். எதுக்கும்மா இந்த அரசியல்.. வேண்டாம் என்றுதான் நான் அவளுக்கு கூறியிருக்கிறேன். அவளும் இந்தியாவில் செட்டிலாகி புதிய தொழில்கள் தொடங்க ஆர்வமாக இருக்கிறாள். ஆனால் சூழ்நிலை அப்படி அனுமதிக்க விடாது போலிருக்கிறது," என்றார்.
நரேந்திர மோடியுடன்
ஆனாலும் கடந்த முறை நரேந்திர மோடி ஹைதராபாத் வந்த போது, அவரைச் சந்தித்துப் பேசினார் லட்சுமி. இது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. பாஜக சார்பில் ஹைதராபாதில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடவும் மோடி யோசனை கூறியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications