சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்று மாலை கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 31-ந்தேதியில் இருந்து சுவாமி ஐய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், படிபூஜை உள்பட விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் 11-ந் தேதி பேட்டை துள்ளலும் நடைபெறும்.

மகரவிளக்கு பூஜையின் போது சுவாமி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து 12-ந்தேதி ஊர்வலமாக புறப்படுகிறது. 13-ந்தேதி இந்த ஊர்வலம் பம்பை வந்தடைகிறது. அங்கு பம்பை விளக்கு, பம்பை சத்யா நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமி ஐய்யப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.
14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐய்யப்பன் காட்சி தருவதாக ஐதீகம். மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபரிமலை ஐயப்பன்கோவில் அமைந்துள்ள பகுதியிலும், பம்பையிலும் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications