மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பு: பொறுப்பேற்ற இஸ்லாமிக் கவுன்சில்- கோவை முபினுக்கும் தொடர்பா?
மங்களூர்: கர்நாடகாவின் மங்களூர் நகரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அறியப்படாத இந்த இஸ்லாமிக் கவுன்சிலின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்து முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடக்கத்தில் சிலிண்டர் வெடிப்பாக கருதப்பட்டது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்து கோலி குண்டுகள், ஆணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் முபின் பயங்கரவாத தாக்குதல் நடத்தவே காரில் சிலிண்டரை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

முபின் கூட்டாளிகள் கைது
மேலும் முபின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வெடிபொருட்கள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டவை. இந்த விசாரணையில் முபினின் கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கர்நாடகா மாநிலம் மங்களூரில் கோவை பாணி சம்பவம் நிகழ்ந்தது.

மங்களூர் குண்டுவெடிப்பு
மங்களூர் நகரில் கடந்த 19-ந் தேதி ஆட்டோ ஒன்று வெடித்து சிதறியது. பின்னர் அந்த ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது; அந்த குக்கர் வெடிகுண்டுதான் வெடித்தது என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் ஷாரிக் என்ற பயங்கரவாதி படுகாயம் அடைந்தார். கோவையை தொடர்ந்து மங்களூர் நகரில் ஒரே பாணியில் தாக்குதல் நடத்த சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

ஷாரிக்- கோவை தொடர்பு
அத்துடன் மங்களூர் பயங்கரவாதி ஷாரிக்கும் கோவைக்குமான தொடர்புகளும் அம்பலமாகின. கோவையில் ஷாரிக் தங்கி இருந்தது; கோவை சிம்கார்டை ஷாரிக் பயன்படுத்தி, கோவையில் பலருடன் செல்போனில் ஷாரிக் பேசியது அத்தனையும் வெட்டவெளிச்சமாகி இருந்தது. இதனால் மங்களூர், கோவை சம்பவங்களின் சூத்திரதாரிகளை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நெருங்கி இருந்தனர்.

பொறுப்பேற்ற இஸ்லாமிக் கவுன்சில்
இந்நிலையில்தான் மங்களூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அறியப்படாத ஒரு இயக்கம் இந்த இஸ்லாமிக் கவுன்சில். ஆகையால் இஸ்லாமிக் கவுன்சிலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இஸ்லாமிக் கவுன்சிலில் கோவை முபினுக்கு என்ன தொடர்பு? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications