மணிப்பூர் காங். கமிட்டி மாநில தலைவர் ராஜினாமா! 8 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் இன்று ஐக்கியம்!
இம்பால்: மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் 8 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று கூண்டோடு பாஜகவில் இணைகின்றனர்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் ஆட்சியை தக்க வைப்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.

இதேபோல் காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதனால் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமனம் செய்துள்ளார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனிய காந்தி.
மேலும் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் பா.ஜ.க. 21 இடங்களிலும் வென்றது.
அதிக இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஆனால் மாநில கட்சிகளான என்.பி.எப், என்.பி.பி. ஆதரவுடன் பாஜக உடனே ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்தனர்.
தற்போதைய நிலையில் மணிப்பூர் சட்டசபையில் பாஜகவுக்கு 25 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இதனிடையே அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாக உள்ளனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications