மணிப்பூர் முதல்வர் மீது தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
உக்ருல்: மணிப்பூர் முதல்வர் இபோபி மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலில் இருந்து அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதனால் மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் இபோபி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்பது அகன்ற நாகாலாந்து கோரும் தீவிரவாதிகளின் கோரிக்கை. இதனால் மணிப்பூரில் தொடர் தாக்குதல்களை நாகா தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் முதல்வர் இபோபி இன்று மாவட்ட தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு நாகா தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ஜவான் படுகாயமடைந்தார்.
இதனிடையே உக்ருல் நகருக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய இபோபி மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயங்கள் ஏதுமின்றி முதல்வர் இபோபி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் இபோபி மீதான தாக்குதலுக்கு நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications