'மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா..'' மணிப்பூரில் ராகுல் காந்தி பேச்சில் எதிரொலித்த "ஒன்றிய அரசு"
இம்பால்: இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றும் இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. வரும் 28-ந் தேதியும் மார்ச் 5-ந் தேதியும் இங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மணிப்பூரில் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பாஜக மாநில கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் அதுபோல் நடக்காமல் இருக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

ராகுல் காந்தி
மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி இம்பாலில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, '' இந்தியாவின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். நமது நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என்று விவரித்தேன். இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறை. அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலங்களின் ஒன்றியம் என நம்மை வரையறுத்தே தேர்வு செய்துள்ளோம்.

பாஜக
இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என பேசியதற்கு பாஜக மற்றும் அதன் சார்பு கட்சிகள் எனக்கு எதிராக பேசினார்கள். இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று நான் சொன்னது பிடிக்கவில்லையா அல்லது மற்ற எல்லாக் கருத்துகளையும், மொழிகளையும், மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்ந்த ஒரே சித்தாந்தம், ஒரே கருத்து, ஒரே மொழி என்பதுதான் பாஜகவின் பார்வையாக இருக்கிறது.

உணர்வு
நான் இங்கு வரும்போது, நான் என்ற உணர்வுடன் வரவில்லை, பணிவுடன் வருகிறேன். ஏனென்றால் நீங்கள் கொடுக்க நிறைய இருக்கிறது, உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் பாஜக இங்கு வரும்போது மரியாதையுடன் வரவில்லை, புரிந்துகொண்டு வரவில்லை. அவர்கள் ஆதிக்க உணர்வுடன் வருகிறார்கள்.

மணிப்பூர் தேர்தல்
மணிப்பூரில் 2002 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் ஆட்சிசெய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஓக்ராம் இபோபி சிங் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியை வலுவான கட்சியாக மாற்றினார். காங்கிரஸ் கட்சி மணிபூரில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது. 2017 தேர்தலிலும் காங்கிரஸ் தேவையான இடங்களைப் பெற்றிருந்தது. ஆனாலும் மாநில கட்சிகளைக் கைகோர்த்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது பாஜக தனியாக தேர்தலை சந்திக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications