மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நினைக்கிறாரா மோடி? யாத்திரை முதல் நாளே ராகுல் கடும் அட்டாக்
இம்பால்: மணிப்பூரில் லட்சக்கணக்கான மக்கள் துயரங்களை அனுபவித்த போது அரவணைக்காத பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என நினைக்கின்றனரோ? என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான கேள்வியை எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல் காந்தி தமது 2-வது கட்ட யாத்திரையை தொடங்கி உள்ளார். பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் இன்று ராகுல் காந்தி தமது யாத்திரையை தொடங்கினார்.

நாட்டின் 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 லோக்சபா தொகுதிகள், 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக ராகுல் காந்தியின் 2-வது கட்ட
யாத்திரை அமைகிறது. மணிப்பூரில் இருந்து 67 நாட்கள் பேருந்து மூலமாக இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். மொத்தம் 6,713 கிமீ இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு முதலில் மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு அனுமதி மறுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கட்டுப்பாடுகள் விதித்து ராகுல் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது மணிப்பூர் அரசு. இதனையடுத்து மணிப்பூரில் இருந்து இன்று ராகுல் காந்தி தமது யாத்திரையை தொடங்கினார்.

#WATCH | Thoubal, Manipur: Congress MP Rahul Gandhi says, " I'm in politics since 2004 and for the first time I visited a place in India where the entire infrastructure of governance has collapsed. After 29th June, Manipur wasn't Manipur anymore, it got divided and hatred was… pic.twitter.com/mp2aJg43DE
— ANI (@ANI) January 14, 2024
தெற்கு மணிப்பூரின் தெளபால் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று பேசியதாவது: மணிப்பூரின் லட்சக்கணக்கான மக்கள் பேரிழப்புகளை எதிர்கொண்டு நிற்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி ஆறுதல் சொல்லக் கூட இங்கே வரவில்லை. உங்கள் கண்ணீரைத் துடைக்க, உங்களின் கரம் பற்றி அரவணைத்து ஆறுதல் சொல்லவில்லை பிரதமர் மோடி. ஒருவேளை பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என நினைக்கிறார்களோ? உங்கள் வலி அவர்களுடைய வலியாக உணர்ந்து கொள்ளப்படவில்லையே.
#WATCH | Manipur | Congress MP Rahul Gandhi interacts with locals in Thoubal over a cup of tea, as Bharat Jodo Nyay Yatra continues. pic.twitter.com/UB1ytaPABC
— ANI (@ANI) January 14, 2024
ஆனால் மணிப்பூரி மக்களின் துயரத்தையும் வலியையும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் காயங்களையும் வருத்தங்களையும் உள்வாங்கிக் கொள்ளவும் முடிகிறது. இந்த மாநிலத்தில் எங்களால் அமைதியையும் நல்லிகணத்தையும் எங்களால் கொண்டு வர முடியும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக பேசிய காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியால் கடலில் பயணம் செய்ய முடியும். கடலுக்குள் மூழ்குவதற்கு நேரத்தை செலவிட முடியும். ஆனால் மணிப்பூருக்கு அவரால் வர முடியாது. பாஜக, மதத்தையும் அரசியலையும் ஒன்றாக்கிவிட்டது என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications