ஒரு பக்கம் மைத்தேயி! மறுபுறம் குக்கி! நடுவில் சிக்கிய இஸ்லாமியர்கள்! மணிப்பூர் நிலைமை ரொம்பவே மோசம்
இம்மால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடரும் நிலையில், இங்கு மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே அங்குள்ள சிறுபான்மை இஸ்லாமியர்கள் வசமாக மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் இனக் கலவரம் ஏற்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகிறது.. இதனால் அங்கு மாநிலம் முழுக்க பெரும் பதற்றமான சூழலே நிலவி வந்தது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும், இணையச் சேவையும் முடக்கப்பட்டது. இருப்பினும், அங்கு அமைதி நிலைமை திரும்பப் பல காலம் ஆனது. இப்போது தான் மணிப்பூர் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு எந்தவொரு பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
மணிப்பூர்: இப்படி மணிப்பூரில் பெரும்பாலான இடங்களில் அமைதி திரும்பி வருகிறது என்ற போதிலும், மோதலின் மையப்பகுதியாக இருக்கும் குக்கி பெரும்பான்மையாக உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்திலும், மைத்தேயி பெரும்பான்மையாக இருக்கும் பிஷ்ணுபூர் மாவட்டத்திலும் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்குத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், வெடி குண்டு தாக்குதல்களும் தொடர்ந்தே வருகிறது.
இரு மாவட்டங்களுக்கும் இடையே 35 கி.மீ இருக்கும் நிலையில், அங்கு சில இடங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே நடக்கும் மோதலின் நடுவில் இஸ்லாமியர்கள் இப்போது மாட்டிக் கொண்டு தவிர்க்கிறார்கள்.
இஸ்லாமியர்கள்: மணிப்பூரின் உள்ள 32 லட்சம் மக்கள்தொகையில் 9% பேர் இஸ்லாமியர்கள் ஆகும்.. அங்கு இப்போது குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களுக்கு இடையே மோதல் தொடரும் நிலையில், நடுவில் இஸ்லாமியர்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதை விரும்பும் இவர்கள் இதற்கு அழைப்பு விடுக்கிறார்கள்.
இப்போதும் கூட அங்கு வன்முறை உச்சத்தில் இருந்த பிஷ்னுபூர் மாவட்டத்தில் குவாக்டா கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குக்கி அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் மீண்டும் வன்முறை ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், அதையெல்லாம் தாண்டியும் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மற்றும் அவரது மகன் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பதற்றம்: இந்த பதற்றத்தால் இங்குள்ள இஸ்லாமியர்கள் நடுவில் சிக்கிக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஜமியத் உலமா-இ-ஹிந்தின் சலாவுதீன் காசிமி கூறுகையில், "இங்கு மோசமான சூழல் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் எங்கள் மசூதிகளைக் கொஞ்ச நேரம் பயன்படுத்த வேண்டி இருந்தது. நாங்கள் எங்கள் நிலைமையை விளக்கிய பிறகு அவர்கள் வெளியேறினர். இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அச்சமாகவே இருக்கிறது" என்றார்.
இந்த குவாக்டா கிராமம் என்பது குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் ஒன்றாக வாழ்ந்த கிராமமாகும். இருப்பினும், இங்கு சுமார் 90% வரை இஸ்லாமியர்களே வசிக்கிறார்கள்.. மணிப்பூரில் நடக்கும் மோதலில் இவர்களுக்குத் தொடர்பு இல்லை என்ற போதிலும் இரண்டு தரப்பிற்கும் இடையில் சிக்கி உதவியற்றவர்களாக உள்ளனர். இங்கு அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை: இங்கு மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் இங்குள்ள மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.. மாணவர்களால் கல்வி கூட கற்க முடியாத ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள முஸ்லீம்கள் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடம் சண்டையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "நேபாளிகள் மக்களைப் போலவே நாங்கள் இங்கே சிறுபான்மை சமூகம்.. இந்த வன்முறையால் எங்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. அமைதியை மீட்டெடுக்க எங்கள் குக்கி மற்றும் மைத்தேயி சகோதரர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications