மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்: காலை 10 மணி வரை 12 சதவீத வாக்குகள் பதிவு!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகி உள்ளன.
60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 5 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மணிப்பூரின் 38 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 173 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 35 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் 4 பேர் பெண்கள். பாஜகவில் 36 பேர் ஆண்கள், 2 பேர் பெண் வேட்பாளர்கள். நாகா மக்கள் கட்சி 24 ஆண்களையும் 3 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.
மணிப்பூரில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்தது. மாநில முதல்வரும் ஹென்காங் தொகுதி எம்எல்ஏவுமான பைரேன் சிங் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அது போல் தொங்கம் பிஸ்வஜித் சிங், சட்டசபை சபாநாயகர் கெம்சந்த் சிங், துணை முதல்வரும் என்பிபி வேட்பாளருமான யும்நம் ஜோய்குமார், மணிப்பூர் காங்கிரஸ் கட்சித் தலைவர் என் லோகேஷ் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
மொய்ராங்கில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சி, நலனே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக, காங்கிரஸ், என்பிபி ஆகியன போட்டியிடுகின்றன. பாஜக சார்பில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் வென்ற புக்ரெம் சரத்சந்திர சிங் இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
அது போல் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த மய்ரெம்பம் பிரித்விராஜ் தற்போது பாஜக உறுப்பினராக போட்டியிடுகிறார். அது போல் நாகா மக்கள் கட்சியின் சார்பில் தொங்கம் சாந்தி சிங்கும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் கிராமத்திற்கு குடிநீர் விநியோகம், தரமான சாலைகள் உள்ளிட்டவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. தலைநகர் இம்பாலில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமம் லம்லய் சட்டசபை தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 5 பேர் போட்டியிடுகிறார்கள், காங்கிரஸ், பாஜக, அதவாலே கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மணிப்பூரில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகி உள்ளன. இம்பால் கிழக்கு: 9.8%, இம்பால் மேற்கு: 10.7%, பிஸ்னுபூர்: 12.1%, சூரசந்த்பூர்: 5.3%, கங்போக்பி: 13.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications