''ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வைக்காதீங்க..'' கோரிக்கை வைக்கும் மணிப்பூர் பழங்குடியினர்.. ஏன் தெரியுமா?
இம்பால்: மணிப்பூரில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மணிப்பூர் பழங்குடியின அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் என ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மணிப்பூரில் 60 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இங்கு பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலையடுத்து மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, இடதுசாரி முன்னணி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கவுள்ளன. மணிப்பூரில் தற்போது பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது.

பா.ஜ.க
2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்தது பா.ஜ.க. ஆனாலும், பெரும்பான்மை பெறும் வகையில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. மணிப்பூர் முதல்வரானார் பைரோன் சிங். மணிப்பூர் மாநில வரலாற்றில் முதல்முறை பாஜக இப்போதுதான் ஆட்சியை பிடித்தது.

தேர்தல்
மணிப்பூரில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்துவர்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்பு ஏற்படும் என கோரிக்கை எழுகிறது.

பழங்குடியினர்
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு ரிசர்வ் தொகுதியாக 20 தொகுதிள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள் வசித்து வருகின்றனர். முதல்கட்ட தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பழங்குடியின அமைப்புகள் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஓய்வு நாள்
எங்கள் மாநிலத்தின் மக்கள்தொகையில் 43 சதவீதம் பழங்குடியின மக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது புனித நாளாகும். எனவே தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வர். மேலும் ஓய்வு எடுக்கவும் பயன்படுத்திக் கொள்வர்.

ஞாயிறு வேண்டாம்
இதனை கருத்தில் கொண்டு முதல்கட்ட தேதியை மட்டும் மாற்ற வேண்டும். வேறு எந்த தேதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் மற்றும் கிகி இன்பி சங்கம்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications