40 நாட்கள்.. பாஜக ஆளும் மணிப்பூரில் ஓயாத வன்முறை- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம்!
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கும் மேலாக இன வன்முறை நீடித்து வருவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே பெரும் வன்முறை தொடருகிறது. கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வன்முறை 40 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இரு இனக்குழுவினருமே வாழ்விடங்களில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குக்கி அகதிகள், மிசோரம் மாநிலத்துக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதேபோல் நாகாலாந்து மாநிலத்திலும் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காடுகளில் உயிர்தப்பி பதுங்கி உள்ளனர். மைத்தேயி- குக்கி இரு குழுவினருமே ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இம்மோதல்களின் அடுத்த கட்டமாக மாநில, மத்திய அமைச்சர்களின் வீடுகள் மணிப்பூரில் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. மேலும் மணிப்பூரில் வன்முறைக்கு காரணமே பாஜக என குற்றம்சாட்டி உள்ளூர் பாஜக தலைவர்களின் வீடுகள், உள்ளூர் பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலத்தில் முகாமிட்டு அமைதி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் மத்திய அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பது கடும் சர்ச்சையையும் எழுப்பி இருக்கிறது.
இந்நிலையில் மணிப்பூர் வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,. ஜனநாயக நாட்டில் வெறுப்பு, வன்முறைக்கு இடமே இல்லை. வெறுப்பும் வன்முறையும்தான் இப்போதைய மணிப்பூர் வன்முறைக்கு காரணம். இந்த வன்முறை சம்பவங்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications