ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் மன்மோகன்சிங்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார் மன்மோகன்சிங். தற்போதைய நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

இதனால் மன்மோகன்சிங் ராஜ்யசபாவுக்கு எந்த மாநிலத்தில் தேர்வு செய்யப்படுவார் என்பது விவாதப் பொருளாக இருந்தது. ஒருகட்டத்தில் தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்கை தேர்ந்தெடுக்க திமுகவின் உதவியை கேட்டது காங்கிரஸ்.
திமுகவைப் பொறுத்தவரையில் 3 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை மதிமுகவுக்கு ஒதுக்கிவிட்டது. அதனால் காங்கிரஸ் கோரிக்கை குறித்து பரிசீலித்து வந்தது.
முன்னாள் பாரதப் பிரதமர்
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 6, 2019
மாண்புமிகு உயர்திரு. மன்மோகன்_சிங் அவர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும்
மேல் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். pic.twitter.com/rZi8jaSacy
முதலில் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய ஒப்புக் கொண்டது திமுக. பின்னர் திடீரென பல்டி அடித்தது, இதனால் காங்கிரஸ் மேலிடம் திமுக மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் மன்மோகன்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபாவில் மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து மன்மோகன்சிங் விமர்சனங்களை முன்வைப்பார் என்பதை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications