'மெளனச் சாமி' மன்மோகன் தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம்: கமல்நாத்
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் வாய் மூடி மவுனமாக இருந்ததுதான் அரசின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மற்றும் காங்கிரஸ் தோல்விக்கும் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த பேட்டியில் கமல்நாத் கூறுகையில்: தகவல் பரிமாற்றம் இல்லாததுதான் அரசின் பிரச்சனைகளுக்கு மூல காரணம். பிரதமர் வாய் மூடி மவுனமாக இருந்ததால் தகவல் பரிமாற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மன்மோகன்சிங் பலவீனமான பிரதமர் இல்லை, அவரை சோனியாகாந்தி தனது விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டி வைக்கவும் இல்லை. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் அடைந்த தோல்வி தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.

2ஜி ஊழல் குற்றச்சாட்டு வந்த உடனேயே, அதுகுறித்து உரிய விளக்கத்தை மக்கள் முன்பாக பிரதமர் வைத்திருக்க வேண்டும். அமைச்சர்களும் அதை செய்ய தவறிவிட்டனர். மக்களுடனான தகவல் பறிமாற்றத்தில் ஏற்பட்ட சுணக்கம்தான் காங்கிரசின் தேர்தல் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
உணவு, வேலைபாய்ப்பு, நிலம் உரிமை சட்டங்களை காங்கிரஸ் அரசு கொண்டுவந்தபோதிலும், அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது ஒரு அரசின் கடமை, இதில் காங்கிரசை புகழ என்ன இருக்கிறது என்ற மனநிலையில்தான் மக்கள் இருந்துள்ளனர். இந்த தேர்தலில் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் காங்கிரசுக்கு எதிராக அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications