இந்திரா காந்தி காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ஏற்க தயங்கிய மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ஏற்க முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தயக்கம் காட்டியதாக அவரது மகள் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள் தமன்சிங், ‘முற்றிலும் அந்தரங்கம்: மன்மோகன் மற்றும் குர்சரண்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில் மன்மோகன்சிங் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தமன்சிங் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
- 6வது திட்டக் குழுவின் (1980-85) உறுப்பினராக மன்மோகன்சிங்கை நியமிக்க அப்போதைய பிரதமர் இந்திரா முடிவு செய்தார். ஆனால் அரசுப் பணியில் ஓய்வு பெற 10 ஆண்டுகாலம் இருக்கும் நிலையில் அப்பதவியை ஏற்க மன்மோகன்சிங் தயங்கினார்.
- இதனால் திட்டக் குழு உறுப்பினர் செயலர் என்ற பதவியை மன்மோகனுக்காக இந்திரா காந்தி உருவாக்கினார். இதனால் மன்மோகன்சிங் அரசுப் பணியிலே நீடிக்கவும் வழி ஏற்பட்டது.
- அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து, மன்மோகன்சிங்கை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க இந்திரா காந்தி முடிவு செய்திருந்தார்.
- இதை எதிர்பார்க்காத மன்மோகன்சிங், இந்திராவை நேரில் சந்தித்து, பல ஆண்டுகாலம் கடினமான பணிகளை செய்துவிட்டதால் இலகுவான பணி ஒன்றை விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
- மன்மோகன்சிங்கின் இந்த பதிலை கேட்டு புன்னகைத்த இந்திரா, உங்களுக்கு 50 வயதுதான் ஆகிறது.. இலகுவான பணி செய்ய நீங்கள் இன்னமும் இளைஞர்தான் என்று கூறியிருக்கிறார். (பின்னர் மன்மோகன்சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றார்)
- மன்மோகன்சிங் இளம்வயதில் மருத்துவராக விரும்பினார். இதற்காக அக்காலத்தில் மருத்துவ படிப்புக்கு முந்தைய படிப்பாக இரண்டு ஆண்டு காலம் எப்.எஸ்.சி. என்ற படிப்பை படிப்பதற்காக 1948-ம் ஆண்டு, அமிர்தசரசில் உள்ள கல்சா கல்லூரியில் மன்மோகன்சிங் சேர்க்கப்பட்டார்.
- கல்லூரியில் சேர்ந்த இரண்டே மாதங்களில் மருத்துவ படிப்பில் மன்மோகன்சிங்குக்கு ஆர்வம் இல்லாமல் போய் விட்டதாம்.
- பின்னர் தன்னுடை தந்தையின் கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் மகன்மோகன்சிங். அந்த கடையில் அவரை சமமாக நடத்தவில்லை. இதனால் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படித்தார் மன்மோகன்சிங்,
- பிரதமர் பதவி வகித்தபோது, ஒவ்வொரு நாளும் அலுவலகம் அவரோடு இணைந்தே இருந்தது. பெரிய துணியில் கட்டிய கோப்புகள் வீட்டுக்கு வரும். படுக்கையில் அமர்ந்தவாறு, மடியில் ஒரு தலையணையை போட்டுக்கொண்டு உட்கார்ந்து விடுவார். அவரது பக்கத்தில் கோப்புகள் குவியலாக இருக்கும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications