மிசோரமில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை- தொங்கு சட்டசபைதான்.. பாஜக சீனிலேயே இல்லையாம்- புது சர்வே!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; இந்த தேர்தலில் தொங்கு சட்டசபைக்குதான் சாத்தியம் என்கிறது Manorama News-VMR கருத்து கணிப்பு.
மிசோரம் சட்டசபையில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரமில் தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சியில் பாஜகவும் இணைந்திருக்கிறது.

மிசோரம் பாஜக: மணிப்பூர் வன்முறைகளைத் தொடர்ந்து பாஜகவிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி விலகி நிற்கிறது. சட்டசபை தேர்தலிலும் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக 23 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
மிசோரம் தேர்தல்: மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக ஆகியவை பிரதான கட்சிகள். இம்மாநில சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தொங்கு சட்டசபை: மிசோரம் மாநில தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள், மிசோரமில் தொங்கு சட்டசபைக்குதான் சாத்தியம்; பெரும்பான்மையை எந்த கட்சியுமே பெறாது என்றே கணித்துள்ளன. மிசோரம் தேர்தல் நடைபெறும் நிலையில் Manorama News-VMR வெளியிட்ட கருத்து கணிப்புகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு எத்தனை இடங்கள்?: Manorama News-VMR கருத்து கணிப்பு முடிவுகள்: ஆளும் மிசோ தேசிய முன்னணி 11-15 இடங்கள்; காங்கிரஸ் 12 முதல் 16 இடங்கள்; ஜோரம் மக்கள் இயக்கம் 10 முதல் 14 இடங்கள். 2018 தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 27, காங்கிரஸ் 4, ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களில் வென்றிருந்தன. இத்தேர்தலில் பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 1 அல்லது 2 இடங்களுக்கு சாத்தியம். அதாவது மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜக சீனிலேயே இல்லை என்கிறது இக்கருத்து பணிப்பு.
கூட்டணி ஆட்சி: மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி அரசு அமைக்கலாம்; ஜோரம் மக்கள் இயக்கமும் காங்கிரஸும் புதிய கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். மிசோ தேசிய முன்னனியும் ஜோரம் மக்கள் இயக்கும் பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என்கின்றன. ஆனால் பாஜகவோ நாங்கள் இல்லாத கூட்டணி ஆட்சியே சாத்தியம் இல்லை என்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications