ஒரே குழப்பம்: பெங்களூரில் பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்ட பெரும் குழப்பம் காரணமாக பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை மாலை பெங்களூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெங்களூரில் பெரும் பதட்டம் நிலவியது.
இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ, மாணவியர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

144 தடை
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்பட 16 பகுதிகளில் திங்கட்கிழமை விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று வரை நீடிக்கிறது. இதனால் அப்பகுதிகளில் பதட்டமாக உள்ளது.

பள்ளிகள்
கலவரத்தை அடுத்து இன்று பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்று தனியார் பள்ளிகள் குழம்பின. இதையடுத்து 50 சதவீத தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள்
பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டாலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் வீட்டிலேயே இருந்து கொண்டனர்.

பயம்
புதன்கிழமை பள்ளிகளை திறக்கலாம் என்று பெங்களூர் துணை கமிஷனர் வி ஷங்கர் அறிவித்துள்ளார். ஆனால் திங்கட்கிழமை நடந்த சம்பவங்களால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பெங்களூரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பவில்லை என்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளோம் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications